Home CRIME NEWS தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது – இருவர் தலைமறைவு

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது – இருவர் தலைமறைவு

14
Two arrested for chain-breaking at Tellippalai Durga Amman temple – Two absconding 

Two arrested for robbing jewelry Two more have gone missing. Four men from the Kilinochchi area were arrested in connection with the robbery and two women are wanted in hiding.

Gold jewelry was confiscated from four of the slaves who took part in the festival. They threatened him with an old woman and robbed him of a gold chain.

The four who looted the jewelry in connection with the incident lodged a complaint at the Tellippalai police station.

Two men were arrested in the ensuing investigations. The 33- and 37-year-olds from the Kilinochchi area had arrived in a van.

The two women who came to help with their robbery have gone into hiding. The search for them is being carried out by the police.

The van in which the suspects were traveling has been detained by police. Police said a handcuff and a chain were seized from the suspects.

Two Arrested For Chain-Breaking At Tellippalai Durga Amman Temple - Two Absconding

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது – இருவர் தலைமறைவு

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் பெண்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன.

அவர்கள் மூதாட்டி ஒருவரிடம் அவரை அச்சுறுத்தி தங்கச் சங்கிலி ஒன்றினை கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நகைகளைப் பறிகொடுத்த நால்வரும் தெல்லிப்பழை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்களது கொள்ளைக்கு உதவியாக வந்த பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணி காவல்துறையினரினால் முன்னெடுக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் பயணித்த வான் காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினரினர் தெரிவித்தனர்.