பிரசாந்த் நீல் இயக்கிய, கேஜிஎஃப்: அத்தியாயம் 1 மற்றும் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 யாஷ் நடித்த ராக்கியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இரண்டாம் பாகத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, எடிட்டர் உஜ்வல் குல்கர்னி மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்
கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான KGF திரைப்படம் இரண்டு பாகங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் இறுதியில் மூன்றாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் மூன்றாம் பாகத்தின் கதை இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது இரண்டாம் பாதியில் இறுதியில் யாஷ் தங்கம் அனைத்தையும் முடித்துக் கொண்டு ஒரு கப்பலில் தப்பிச் செல்வது போலவும் அவரை இந்திய ராணுவம் மற்றும் கப்பற்படை சுற்றி வளைக்க அவர் நீருக்குள் மூழ்குவது போலவும் காட்டப்படுகின்றது. அது எதிரே ஒரு இந்தோனேஷியா கப்பல் ஒன்று வருவது படம் காட்டப்பட்டது.
இவ்வாறுஇருக்கையில் இதுதான் மூன்றாம் பாக கதைக்கான அடித்தளம் எனத் தெரியவந்துள்ளது. அதாவது இந்தோனேசிய கப்பல் உதவியுடன் நீர்மூழ்கி கப்பலில் தப்பிச் சென்று உலக அளவில் பெரிய மான்ஸ்டராக உருவெடுக்கிறார் யாஷ். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகின்றது.
மேலும் இந்த படத்தின் அறிமுகக் காட்சியே மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தப் படமும் 1000 கோடி வசூலை எட்டுவது உறுதி என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரசாந்த் நீல் இயக்கிய யாஷின் கேஜிஎஃப்: அத்தியாயம் 2, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடியைத் தாண்டியுள்ளது. படத்தின் வெற்றியை தயாரிப்பாளர்கள் சிறப்பு விருந்துடன் கொண்டாடினர். யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் மகிழ்ச்சியாக இருந்தனர். கேக்கில் எழுதப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது கேஜிஎஃப்: அத்தியாயம் 2 இன் தொடர்ச்சியைக் குறிக்கிறது.