Home Local news 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைத்துள்ளன

6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைத்துள்ளன

20

இலங்கைக்கு  6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைத்துள்ளதுடன், அவை சீனா , அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன என அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைத்துள்ளன

அத்துடன் இலங்கைக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் என்பன இதுவரை போதுமானளவு கிடைத்துள்ளன என்றார்.

இதற்கமைய, இதுவரை எஸ்ட்ரசெனிகா, சினோஃபாம், ஸ்பட்னிக், மொடர்னா மற்றும் பைசர் என்பன 4கோடியே 85 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றார்.