Home CRIME NEWS வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி!

வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி!

12

நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்புவதற்கு வரிசையில் காத்திருந்த ஆட்டோ சாரதி ஒருவருக்கும், சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து சைக்கிள் ஓட்டுநரை, ஆட்டோ சாரதி கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாமயடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் ஆட்டோ சாரதி – அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமானது.

இந்நிலையில் அவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரிசைகளால், நீண்டநேரம் காத்திருக்கும் மக்கள் மத்தியில் அவ்வப்போது மோதல்களும் ஏற்படுகின்றன.

வரிசையை முந்துதல், ஏனையோருக்கு வாய்ப்பளித்த உள்ளிட்ட காரணங்களால்தான் இப்படியான மோதல்கள் இடம்பெறுகின்றன.

வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி! வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி! வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி! வன்முறைக் களமாக மாறும் ‘வரிசை’! கத்திக்குத்தில் இளைஞன் பலி!