Home gossips 2 நாள் பேஸ்புக் காதல்: 19 வயது காதலனுடன் பற்றைக்காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது...

2 நாள் பேஸ்புக் காதல்: 19 வயது காதலனுடன் பற்றைக்காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவி!

26

15 வயதான பேஸ்புக் காதலியை கடத்திச் சென்று, பற்றைக்குள் குடும்பம் நடத்திய 19 வயதுடைய இளைஞனை வெயங்கொட பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் களுத்துறை, மொரந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர்.

இளைஞனும், சிறுமியும் பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளனர். வெறும் இரண்டு நாள் தொடர்புதான். இருவரும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய அன்றைய தினம் இரவு முழுவதும் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பற்றைப் பகுதியொன்றில் சிறுமியும் இளைஞனும் பொழுதைக் கழித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது மகள் காணாமல் போனதாகவும், இரண்டு நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் அவரது தாயார் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெயாங்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் சன்ன வெட்டேவ, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரி, சப் இன்ஸ்பெக்டர் சகுனி ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பேஸ்புக் காதலனின் தொலைபேசி இலக்கத்திற்கு பெண் பொலிசார் ஒருவர் தொடர்பு கொண்டு வலைவிரித்துள்ளார்.

இன்னொரு பெண் சிக்கினார் என்ற உற்சாகத்தில் அந்த இளைஞனும், ஜொள்ளு விட்டுள்ளார்.

3 நாட்கள் இருவரும் தொலைபேசியில் பேசிய பின்னர், கம்பஹா பஸ் நிலையத்தில் சந்தித்து பேசுவதென முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 22 ஆம் திகதி புதிய காதலியை சந்திக்க, கம்பஹா பஸ் நிலையத்திற்கு வந்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.