Home Astology 11.01.2022 இன்றைய ராசி பலன்

11.01.2022 இன்றைய ராசி பலன்

10

மேஷம்:
அசுவினி: சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வசதி பெருகும்.
பரணி: குடும்பத்தினர் உங்களை பெருமிதப்படுத்துவர். மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1: உங்களது கோபத்தை துாண்டியவர் மன்னிப்புக் கேட்பார்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: பணவரவு கூடும். பணியைப் பரபரப்பாக முடிப்பீர்கள்.
ரோகிணி: நீங்கள் எடுத்த விஷயத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.
திருவாதிரை: துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும்.
புனர்பூசம் 1,2,3: வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் குறையும்.

கடகம்:
புனர்பூசம் 4: வியாபாரிகளுக்கு பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.
பூசம்: எந்தவொரு விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள்.
ஆயில்யம்: புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும்.

சிம்மம்:
மகம்: மேலதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரம்: கல்விக்கான செலவு கூடும். சாதகமான பலன்கள் கிடைக்கும்.
உத்திரம் 1: நிதானத்தைக் கடைபிடித்தால் வீண் பிரச்னை ஏற்படாது.

கன்னி:
உத்திரம் 2,3,4: பிறருக்கு வாக்குறுதியை அளிக்கும் முன் யோசிப்பது நல்லது.
அஸ்தம்: முக்கிய முடிவு எடுக்கும்போது அனுபவசாலியின் ஆலோசனையை பெறுங்கள்.
சித்திரை 1,2: மற்றவர்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்:
சித்திரை 3,4: தடைகள் நீங்கி எடுத்த விஷயத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
சுவாதி: குடும்பத்தினரை அனுசரித்துச் சென்று நன்மை காண்பீர்கள்.
விசாகம் 1,2,3: அலுவலக ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்:
விசாகம் 4: பணியிடத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். சோர்வு நீங்கும்.
அனுஷம்: வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சேமிப்பில் ஆர்வம் கூடும்.
கேட்டை: பரபரப்பான நாள். புதிய தீர்மானம் ஒன்றை எடுப்பீர்கள்.

தனுசு:
மூலம்: குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அதிகப்படியான வருமானம் வரும்.
பூராடம்: சகபணியாளர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வர்.
உத்திராடம் 1: குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அதிகம் பாடுபடுவீர்கள்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நட்பு வட்டம் விரியும்.
திருவோணம்: உங்களது பேச்சினால் நன்மை விளையும். நிம்மதி கூடும்.
அவிட்டம் 1,2: வீண் பழி தரும் செயல் எதையும் செய்ய வேண்டாம்.

கும்பம்:
அவிட்டம் 3,4: தந்தையின் உடல்நலம் மேம்படும். கவலை தீரும்.
சதயம்: பணியாளருக்கு சிறப்பான நன்மைகள் ஏற்படும். கலை ஆர்வம் வரும்.
பூரட்டாதி 1,2,3: பயம் தீரும். வீண் வம்புகளில் மாட்ட வேண்டாம்.

மீனம்:
பூரட்டாதி 4: உங்களது பேச்சினால் நன்மை உண்டாகும். அதிகம் உழைப்பீர்கள்.
உத்திரட்டாதி: கவலைப்படாமல் உங்களது கடமைகளை செய்து முடிப்பது நல்லது.
ரேவதி: தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தையும் கைவரப்பெறுவீர்கள்.