அஜீத் குமாரின் வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு, தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் அணைத்து திரையரங்குகளில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எதற்கும் துணிந்தவர் படம் வந்தபோதிலும் , வலிமை தமிழ்நாட்டில் பல திரைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது வாரத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கியதாகத் தெரிகிறது.
சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமையை திரையிட விரும்புகிறார்கள்.
அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். அஜித்தின் 61 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘ஏ.கே 61’ என்று அழைக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, படத்தின் கதை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது, எச்.வினோத் அஜித்துக்கு பல கதைகள் சொன்னாராம். ஆனால், அந்த கதைகள் எதுவும் அஜித்துக்கு பிடிக்கவில்லையாம். பிறகு அஜித்தே, வெற்றி படம் எதையாவது ரீமேக் பண்ணலாம் என்ற யோசனையை சொன்னாராம்.
அதுமட்டும் இன்றி, இந்திய மொழித் திரைப்படங்களை ரீமேக் செய்யாமல் ஹாலிவுட் படம் எதையாவது ரீமேக் செய்யலாம், என்று கூறிய அஜித், எந்த படத்தை ரீமேக் பண்ணலாம் என்றும் கூறிவிட்டாராம்.
ஆம், அஜித்துக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகர் அல்பசீனோ நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளியான ‘டாக் டே அஃப்ட்டர்நூன்’ (Dog Day Afternoon) என்ற படத்தை தான் அஜித் தேர்வு செய்திருக்கிறாராம். வங்கி கொள்ளையை மையப்படுத்திய இப்படம் தான் அஜித்தின் 61 வது படமாக உருவாக இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
இதற்காக அந்த ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முறைப்படி பெற்று போனி கபூர் தயாரிக்க இருக்கிறாராம்.அத்துடன் ஜிப்ரான் ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது