Home Cinema ஹச் வினோத்தின் மூன்றாவது சம்பவம் லோடிங்!! ! AK 61-லேட்டஸ்ட் அப்டேட் இதோ .!

ஹச் வினோத்தின் மூன்றாவது சம்பவம் லோடிங்!! ! AK 61-லேட்டஸ்ட் அப்டேட் இதோ .!

10

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61வது படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11ம் தேதி பூஜையுடன் தொடக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் படப்பிடிப்பு இன்று காலை ஐதராபாத்தில் மெயின்ரோட்டில் நடைபெறும் பொழுது அஜித் ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்து விட்டு பைக்கில் ஸ்டண்ட் செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, வலிமை ஆகிய படங்களில் இடம்பெற்றிருந்த பைக் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது, அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேபோல் தற்போது AK61 படத்திலும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் உள்ளது என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு வரும் மே 1 ஆம் தேதி படத்தின் டைட்டிலை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.