Home Local news ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிர்வாக செயலாளர் மறைந்த எஸ்.எச்.ஆரியசேன அவர்களின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிர்வாக செயலாளர் மறைந்த எஸ்.எச்.ஆரியசேன அவர்களின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி!

7
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிர்வாக செயலாளர் மறைந்த எஸ்.எச்.ஆரியசேன அவர்களின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

திவுலபிட்டிய, வேபட, தெல்வகுர பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற பிரதமர், அவரது மறைவால் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக நீண்டகாலம் கடமையாற்றிய திரு. எஸ்.எச்.ஆரியசேன அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருடன் நட்புறவுடன் செயற்பட்டு அக்கட்சிக்கு பெரும் சேவையாற்றினார்.

அவர் சுகயீனம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

ஸ்ரீலங்கா

பிரதமருடன் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் திவுலபிட்டிய பிரதேச சபையின் தலைவர் ஆகியோரும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டிருந்தனர்.