Home Cinema வெற்றி மாறனும் ராகவா லாரன்சும் திடீரென சந்திப்பு !! வைரலாகும் தகவல் இதோ !!

வெற்றி மாறனும் ராகவா லாரன்சும் திடீரென சந்திப்பு !! வைரலாகும் தகவல் இதோ !!

16

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களைத் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். ‘ஆடுகளம்’ திரைப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது. அதேபோல், ‘உதயம்’, ‘காக்காமுட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற படங்களைத் தயாரித்தது வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’. தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளது ‘காக்காமுட்டை’. ‘விசாரணை’ தேசிய விருதை வென்றது மற்றும் இந்தியாவின் சார்பாக அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Dashfhasjfhj

வெற்றி மாறன் மற்றும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள தி பவர் என்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகண்ட் லுக் போஸ்டரும் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

Fdasfafa 1

இந்தப் படத்தில் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தமிழ்வேல் என்ற இளைஞனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மலேசியா-சிங்கப்பூர் வரை வேலைக்காக புலம் பெயர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகளின் அவலநிலையை இப்படம் பேசுவது கவனிக்கத்தக்கது.

Ddashfjahfja

எதிர் நீச்சல், கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். பிரபல தெலுங்கு பட இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லாரன்ஸின் காஞ்சனா-3 படத்திற்கு தமன் ஏற்கனவே பின்னணி இசை அமைத்துள்ளார்.

Dfasfj

தற்போது வெற்றி மாறன் – ராகவா லாரன்ஸ் – கதிரேசன் – துரை செந்தில் ஆகியோர் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது