Home Astrology விருச்சிகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

விருச்சிகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

13
விருச்சிகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். நண்பர்களையும், கூட்டாளிகளையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரம் உயர்வாகவே தொடர்வதால் புதிய முதலீடுகளைச் செய்ய நினைப்பீர்கள்.

ரகசிய செயல்பாடுகளின் மூலமாகவும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். இதற்கேற்றவாறு திட்டங்களை மாற்றி செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவீர்கள். அதோடு புதிய அரிய வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.

விருச்சிகம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அதிகாரப் பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்து காணப்படும்.

பெற்றோரின் ஆசிகளையும் அறிவுரை ஆலோசனைகளையும் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களைச் செய்ய நேரிடும். இதனால் உங்கள் மதிப்பு கெüரவம் அந்தஸ்து ஆகியவை பலமடங்கு பெருகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் நண்பர்கள், சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் தேடிவந்து உதவிகளைச் செய்வார்கள். உங்கள் தோற்றத்தில் மிடுக்கும் நடையில் கம்பீரமும் உண்டாகும். செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

புதிய தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொள்வீர்கள். மேலும் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து ரிஸ்க் எடுத்துச் செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளைத் தேடித்தரும். ஆன்மிகத்திலும், ஆலய திருப்பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

உங்களின் தரும சிந்தனை மேலோங்கும். உங்களின் உழைப்பு வீண் போகாது. உடலில் இருந்த சோர்வும் ஆயாசமும் மறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் முழுத் திறமையை வெளிக்கொணர்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும் கால கட்டமிது என்றால் மிகையாகாது.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசு காரியங்களை நிறைவேற்ற சற்று கூடுதல் முயற்சி தேவை. மேலதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். பிரயாணங்களின்போது சற்று விழிப்புணர்வு தேவை.

வியாபாரிகளுக்கு ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். அயல்நாட்டுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் லாபம் பெருகும். தொழிலுக்கான கடன் உதவியும் பெற்று விரிவாக்கம் செய்வீர்கள்.

விவசாயிகள் அரசு வகையில் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். இருப்பினும் சிறுசிறு உடல் உபாதைகளையும் சந்திக்கலாம். கால்நடைகளால் நல்ல லாபமும் கிடைக்கும்.

விருச்சிகம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அரசியல்வாதிகளுக்கு பணம் தொடர்பான விஷயத்தில் தொண்டர்களுடன் சிறிது மனக்கசப்புகள் உண்டாகலாம். இருப்பினும் அமைதியுடன் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள். எவரிடமும் ரகசிய தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் கை ஓங்க எல்லாத் திறமையையும் பயன்படுத்துங்கள்.

கலைத்துறையினர் வரம்பில்லாத வெற்றியைப் பெறப் போகிறீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடத்தில் அன்பு, அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் மிகுந்தளவுக்கு நாட்டம் காண்பீர்கள். மாணவமணிகள் அச்சம், வெறுப்பு, பொறாமை போன்ற குணங்களை விட்டொழிக்கத் தயாராகுங்கள்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.

விருச்சிகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், விருச்சிகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், விருச்சிகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்,