Home Accident News வவுனியா- திருகோணமலை வீதியில் விபத்து: 13 பேர் காயம்

வவுனியா- திருகோணமலை வீதியில் விபத்து: 13 பேர் காயம்

12

வவுனியா – திருகோணமலை வீதியின் கெபித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 13 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக எமது ஹிரு செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கெபித்திகொல்லாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Fb Img 1642153542850 Fb Img 1642153536026 Fb Img 1642153532804