வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு, தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் அணைத்து திரையரங்குகளில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எதற்கும் துணிந்தவர் படம் வந்தபோதிலும் , வலிமை தமிழ்நாட்டில் பல திரைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது வாரத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கியதாகத் தெரிகிறது. சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமையை திரையிட விரும்புகிறார்கள்.
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்தது.
ஆனால் அதே சமயம் வலிமை திரைப்படம் பலரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இது வலிமை படத்தின் வசூல் பெரியளவில் பாதித்து என்றே கூறலாம்.மேலும் வலிமை படத்தின் தற்போது வரையிலான மொத்த வசூல் குறித்த விவரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி வலிமை படத்திற்காக நடிகர் அஜித் ரூ.50 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக இயக்குனர் எச்.வினோத் ரூ.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம்.