Home Cinema வலிமை தான் No 1 : பீஸ்ட் இரண்டாவது நாளில் இருத்தே படுத்துருச்சு நீங்களே பாருங்க...

வலிமை தான் No 1 : பீஸ்ட் இரண்டாவது நாளில் இருத்தே படுத்துருச்சு நீங்களே பாருங்க !!!

6

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட் ‘ படத்தில் விஜய் ரா ஏஜென்டாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் மூன்றாவது முறையாக விஜய்க்கு இசையமைத்துள்ளார், மேலும் அவரது இசை படத்திற்கு நன்றாக வேலை செய்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தோடு ரிலீஸான கே ஜி எஃப் 2 படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தை பார்க்க விரும்புவதை காட்டிலும் கேஜிஎஃப் படத்தை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் நான்கு நாளில் 70 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 4 நாளில் 80 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. இதனால் வலிமை படத்தின் சாதனையை முறியடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பீஸ்ட் திரைப்படம். இது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தாலும் விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.