Home Accident News லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேன் விபத்து -சிறுவன் பலி, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேன் விபத்து -சிறுவன் பலி, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

20

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்றிரவு (19) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட வேன் மோதியதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஹொரவ்பொத்தானை- விலேவெவ பகுதியைச் சேர்ந்த கௌசித ஹஸரல் (05வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேன் விபத்து -சிறுவன் பலி, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேன் விபத்து -சிறுவன் பலி, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேன் விபத்து -சிறுவன் பலி, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேன் விபத்து -சிறுவன் பலி, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி