ரிஷபம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
இந்த சுபகிருது வருடத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் புதியவர்கள் உங்கள் செய்தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். முன்யோசனை இல்லாமல் காரியங்களைச் செய்யத் தொடங்கினாலும், சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள்.
மனதில் தைரியமும், எதையும் சாதிக்கும் திறமையும் மேலோங்கும். உடலில் இருந்த நோய் நொடிகள் அகன்று மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்புமுனைகள் உண்டாகும். பணம் தேவைக்கு மேல் சரளமாக வரத் தொடங்கும். அதே நேரம் அனாவசியப் பயணங்களைத் தள்ளிப்போடவும், சிறிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் விசுவாசமாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கும். மனதில் தெளிவுடன் சுறுசுறுப்பாக நடந்து கொள்வீர்கள். இதுவரை விற்க முடியாத அசையாச் சொத்துகளை நல்ல விலைக்கு விற்று லாபமீட்டுவீர்கள். பழைய கடன்களை குறிப்பாக வங்கிக் கடன்களை முழுவதுமாக அடைத்துவிடுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை புரிந்துகொண்டு மாற்றி யோசித்து வெற்றி பெற்று விடுவீர்கள்.
மேலும் மனதிற்கினிய பயணங்களையும் செய்வீர்கள். குழந்தைகளையும் வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் ஒரு புதுவித மாற்றம் அதன் வழியில் நல்ல செல்வம் செல்வாக்கு பெருவதற்குரிய காலகட்டமாக இது அமைகிறது.
உத்யோகஸ்தர்களில் அரசுப் பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். பயணத்தின்போதும், இயந்திரங்களில் வேலை செய்யும்போதும் சற்று கூடுதல் பாதுகாப்புடன் செயல்படவும். சுபச் செலவுகள் கூடினாலும், பொருளாதாரதம் மேன்மை அடைவதால் சமாளிப்பீர்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும்.
வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். சுயதொழில் விருத்தி அடையும். வாழ்க்கை வசதிகளையும், வியாபாரத்தையும் விரிவுபடுத்தி மேன்மை அடைவீர்கள். விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் கூலித் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளவும். பேச்சிலும், செயலிலும் வேகத்தை குறைத்துக் கொள்வீர்கள். இதனால் விசேஷமான நன்மைகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் ஈடேறும்.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தங்கள் கொள்கைகளை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவார்கள். அரசாங்கத்தால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது ஈடேறும்.
கலைத்துறையினருக்கு மதிப்பும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் பெருகும். தொழிலில் ஏறுமுகமாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பொருளாதாரம் ஏற்றம் தரும். சுப காரியங்கள் கைகூடும்.
பெண்மணிகள் தங்களை வெறுத்து ஒதுக்கிய உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக மாறுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். குடும்ப நலம் சிறக்கும். உங்களைக் காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
மாணவமணிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக மாணவர்களுக்காக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். இந்த ஆண்டில் எண்ணியது எண்ணியபடியே நிறைவேறும் கிட்டும்.
பரிகாரம்:- ஏழுமலையானை வழிபடவும்
ரிஷபம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022, ரிஷபம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022, ரிஷபம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 .