Home jaffna news யாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

17

நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 985 பேர் டெங்கு தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 147 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், அதில், 102 தொற்றாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேரும், வவுனியா வில் 10 பேரும், மன்னாரில் 9 பேரும், முல்லைத்தீவில் 6 பேரும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, டெங்குப் பரவலில் கொழும்பு மாவட்டமே முதலிடத்தில் உள்ளதுடன், அங்கு 245 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டனர்.

அதேசமயம் புத்தளத்தில் 242 பேரும், மட்டக்களப்பில் 125 பேரும், திருகோண மலையில் 108 பேரும் டெங்கால் பாதிக்கப் பட்டனர்.

இதேவேளை , கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் எவரும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்ப டவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.