Home jaffna news யாழ்.பொன்னாலை பகுதியில் வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 15 வயது சிறுவன் கைது..!

யாழ்.பொன்னாலை பகுதியில் வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 15 வயது சிறுவன் கைது..!

82

யாழ்.பொன்னாலை பகுதியில் 63 வயதான வயோதிப பெண் ஒருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயதான சிறுவன் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டிற்குச் செல்ல முற்பட்ட வயோதிபர் ஒருவரை அவ்வழியே வந்த 15 வயதான சிறுவன் ஒருவர் உறவினர் ஒருவரின் பெயரை கூறி நான் உங்களை வீட்டில் இறக்குகின்றேன் அம்மா என கூறி பொன்னாலை கட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளான்.

பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து துப்பிரயோகத்திற்கு உள்ளாக்க முறனயன்றுள்ளார். இந்நிலையில் குறித்த வயோதிப பெண் சிறுவனின் கையினை கடித்துவிட்டு தப்பிக்க முயன்று உள்ளார். இருப்பினும் சிறுவன் விடாத நிலையில் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து சிறுவன் ஓடியுள்ளான்.

பின்னர் வயோதிப பெண் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் வட்டுக்கோட்டை பொலிசார் குறித்த சிறுவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.