Home jaffna news யாழ்.பொன்னாலையில் வாள்வெட்டு..! படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

யாழ்.பொன்னாலையில் வாள்வெட்டு..! படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

14

யாழ்.பொன்னாலை பகுதியில் நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் இனந்தொியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சசம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.