Home Accident News யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி

யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி

8

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Photo 2022 04 18 11 46 44

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் புகையிரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vavuniya Acc Vavuniyaa Acc1