Home gossips யாழில் விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டு சிக்கிய ஜோடிகள்

யாழில் விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டு சிக்கிய ஜோடிகள்

15
யாழில் விடுதிகளில் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்த இளம் ஜோடிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்.நகரில் உள்ள இரு விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டதுடன், கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழில் இரு விடுதி

யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

யாழில் விடுதிகளில் 7 தங்கும் விடுதிகள் இன்று சோதனையிடப்பட்டன. அதில் ஒரு விடுதி பதிவு செய்யப்பட்டாதது.

இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பெரும்பாலான விடுதிகளில் இளைஞர்களும், யுவதிகளும் ஜோடியாக அறைகளில் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது சட்டநடவடிக்கையெடுக்க முடியாத போதும், அவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து தங்குமிடங்களையும் கிரமமாக ஆய்வு செய்யவுள்ளதாகவும், அங்கு சிக்கும் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து அவர்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன..

யாழில் விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டு சிக்கிய ஜோடிகள் யாழில் விடுதிகளில் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டு சிக்கிய ஜோடிகள்