Home CRIME NEWS யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில்

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில்

14

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றிரவு  ( 4/5) இடம்பெற்றுள்ளது.

இதன்போது 47 வயதுடைய இருவர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதுடன், இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில்