Home jaffna news யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

21

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது இணுவிலைச் சேர்ந்த சதீஸ் யோகராசா (26) என்னும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் அறைக்குச் சென்றவர் அந்த அறையில் இருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.