யாழ். மானிப்பாய் – நவாலி பகுதியில் வைத்து 185 லீற்றர் கோடா, 60 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.