யாழிற்கு இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விஜயம் செய்துள்ள நிலையில் சமய ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரை என்பவற்றுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த விஜயம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், பிரத மர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.