Home Cinema மைக் மோகனைத் தேடும் விஜய் !! ஏன் தெரியுமா ? வைரலாகும் உண்மை தகவல்...

மைக் மோகனைத் தேடும் விஜய் !! ஏன் தெரியுமா ? வைரலாகும் உண்மை தகவல் இதோ !

12

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கிய இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவும், இல்லாமல் காமெடி திரைப்படமாகவும் இல்லாமல், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. ஆதலால் தனது அடுத்த படத்தை எப்படியும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று தளபதி விஜய் தெலுங்கு பக்கம் சென்றுள்ளார்.

தளபதி விஜய்யின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. அடுத்ததாக இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இத்திரைப்படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் எனற அறிவிப்பு வெளியாகிவிட்டது. சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மைக் மோகன் நடிக்க உள்ளாராம்.

இவர் 80களில் பலம் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். அதன்பின்பு சில காரணங்களால் இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார். அண்மையில் ஹரா எனும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் டீசர் வீடியோ அண்மையில் வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டது தான் மிச்சம். அந்த அளவுக்கு டீசர் ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில் மைக் மோகனை தளபதி விஜய் படத்தில் நடிக்க வைப்பது அவசியமா எனும் கேள்வி தற்போது தளபதி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தளபதி 66 படகுழு என்ன செய்யப்போகிறது என்பதை அடுத்தடுத்து அறிவிப்பு வெளி வந்தால் தெரியும்.