Home jaffna news முள்ளியவளையில் வாள்வெட்டு 7 பேர் மருத்துவமனையில்!

முள்ளியவளையில் வாள்வெட்டு 7 பேர் மருத்துவமனையில்!

14

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டு சம்பவத்தின் போது காயமடைநந்த 7 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று 02.04.2022 மாலை வேளை இருபகுதி இளைஞர் குழுக்களுக்கிடையில் இந்தவாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு இரு இளைஞர் களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது 4 ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பேர் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளதுடன் மேலும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் காயத்துடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.