Home jaffna news முல்லையில் ஆசிரியர் போர்வையில் சிறுமிகளுடன் காமக்கூத்தாடிய காமுகன்!! ஒருதடவையில் இருவருடன்..

முல்லையில் ஆசிரியர் போர்வையில் சிறுமிகளுடன் காமக்கூத்தாடிய காமுகன்!! ஒருதடவையில் இருவருடன்..

19

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இணைக்கப்பட்டு ஆசிரியராக பணியாற்றும் இவனும் சில மாணவர்களும் இணைந்து அங்கு கல்வி கற்கும் இம்முறை சாதராண தரப்பரீட்சை எழுதிய வகுப்பைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவிற்கு வேறு வேறு சந்தர்ப்பங்களில் உட்படுத்தியிருக்கின்றனர்.

முதலில் மாணவர்களுடன் இணைந்து அங்குள்ள மாணவிகளைக் காதலிக்க வைத்து அவர்கள் அனுப்பிய நிர்வாண ஒளிப்படங்கள் மற்றும் பாலியல் உறவில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார். அதனையும் வீடியோவாக எடுத்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு மாணவிகள் என்றெல்லாம் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறான் .மாணவன் ஒருவனும் இவனும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல். ஏனைய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட கூட்டுப் பாலியல் வல்லுறவை எவ்வளவு எளிதாக எவ்வளவு துணிச்சலாக நிகழ்த்தியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாழ்க்கையை நம் சமூகம் என்னவாக உருத்திரிக்கும். அழிக்கும்.

துஷ்பிரயோகங்களும் வல்லுறவுகளும் நாள் தோறும் நுட்பமாகப் பெருகிக்கொண்டே செல்கின்றது.

பாலியல் கல்வியும் அடிப்படை சட்ட மற்றும் பாலியல் விழிப்புணர்வும் பாடசாலைக் கேற்றுக்கு வெளியே சமூக பிற்போக்குத்தனங்களோடு கட்டுண்டு கிடக்கின்றது.

நாமும் அய்யோ இப்பிடியெல்லாமா நடக்குது பெண்பிள்ளைகளே வீட்டில் ஒழுக்கமாக இருங்கள் என்று வகுப்பெடுத்துக்கொண்டிருப்போம்.

பெண் பிள்ளைகளின் சுதந்திரத்தைப் பறிப்பது தான் நாம் இவற்றுக்கு ஆற்றும் எதிர்வினையென்றால் நம் சமூகம் இன்னும் இன்னும் நாசமாய்த் தான் போகும். பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுங்கள்.

பிள்ளை வளர்ப்பைக் கல்வியாக்குங்கள். நம் குழந்தைகளுடன் அமர்ந்து கதையுங்கள்.

துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவதும், பாலியலை உரையடுவதும் நமது சமூகத்திற்கு மிக மிக அவசியமானது.

அம் மாணவிகளுக்கு என்ன நீதி கிடைக்கும். நாம் என்ன நீதியை நாம் கொடுத்துவிடப் போகிறோம். நாம் கொடுக்கக் கூடிய பகுத்தறிவும் சுதந்திரமான உலகமுமே எல்லாப் பிள்ளைகளுக்கும் நம்மால் வழங்கக் கூடிய நீதி.

முல்லையில் ஆசிரியர் போர்வையில் சிறுமிகளுடன் காமக்கூத்தாடிய காமுகன்!! ஒருதடவையில் இருவருடன்..

முல்லையில் ஆசிரியர் போர்வையில் சிறுமிகளுடன் காமக்கூத்தாடிய காமுகன்!! ஒருதடவையில் இருவருடன்..

தொடர்புடைய செய்தி;-

நிர்வாண வீடியோக்கள்!! காதல் வலை வீசி பல மாணவிகளை துஷ்பிரயோகம்!! கொத்தாக மாட்டிய ஆசிரியர், மாணவர்கள்!! முல்லையில் அதிர்ச்சி சம்பவம்