Home jaffna news முல்லைத்தீவு வைத்தியசாலை பெண் ஊழியருக்கு காட்டுப்பகுதியில் வைத்து நடாத்தப்பட்ட கொடூரச் செயல்

முல்லைத்தீவு வைத்தியசாலை பெண் ஊழியருக்கு காட்டுப்பகுதியில் வைத்து நடாத்தப்பட்ட கொடூரச் செயல்

26

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவர் மீது ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது

இவ்வாறு ஊழியர் மீது எதோ ஒரு திரவத்தை வீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் தூர பிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்ற பெண் சிற்றூழியர் ஒருவர் நேற்று இரவு தன்னுடைய கடமைகளை நிறைவு செய்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கொக்காவில் வீதி துணுக்காய் எனும் முகவரியில் அமைந்திருக்கின்றன தன்னுடைய வீட்டிற்கு மோட்டார் வண்டியில் ஒட்டுசுட்டான் நகரத்தை தாண்டி மாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது வனப்பிரதேசத்தில் வீதியில் நின்ற இருவர் குறித்த ஊழியர் மீது ஏதோ ஒரு திரவத்தை வீசியுள்ளனர்

இதனால் கண்கள் பாதிக்கப்பட்ட குறித்த ஊழியர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் அருகில் இருந்த ஒரு பொதுக் கிணற்றில் சென்று முகத்தை கழுவிய போதும் கண்ணில் பார்வை சீராகாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து அவசர தொலைபேசி ஊடாக நோயாளர் காவுவண்டியை அழைத்து மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்திருக்கிறார்

இந்நிலையில் அவருடைய கண்களில் பார்வை பிரச்சினை ஆகியுள்ள நிலையில் என்ன திரவம் வீசப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ்வாறான பின்னணியில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மாங்குளம் மல்லாவி துணுக்காய் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சுமார் 20 வரையான ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் குறித்த பகுதிகளை கடந்து வனப்பகுதி ஊடாக பல்வேறு அச்சத்துக்கு மத்தியிலும் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வைத்தியசாலையில் கடமையாற்ற வருகை தந்து கொண்டிருக்கின்ற போது இவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளமை ஆனது மேலும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த தாக்குதல் முயற்சி திருடர்களா அல்லது கொலை முயற்ச்சியா அல்லது என்ன நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியாத நிலையில் ஊழியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளதோடு குறித்த பாதிக்கப்பட்ட பெண் தான் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வேலைக்கு வருவதாகவும் இவ்வாறான சம்பவம் இன்னும் தன்னை அச்சத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தான் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தன்னை தன்னுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வைத்தியசாலைக்கு கடமைக்கு மாற்றி தரவும் தன் மீதான தாக்குதல் அல்லது கொலை முயற்சியை அல்லது அவ்வாறான செயற்பாட்டிற்கு ஒரு நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்

குறித்து ஊழியர் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.