Home jaffna news முல்லைத்தீவு கடலில் ஒதுங்கியது கப்பலா? கடற்படையினர் ஆய்வில்!

முல்லைத்தீவு கடலில் ஒதுங்கியது கப்பலா? கடற்படையினர் ஆய்வில்!

15

முல்லைத்தீவு செம்மலை நாயாற்று கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் பாரிய கப்பல் வடிவம் கொண்ட இரும்பு பொருள் ஒன்ற கரை ஒதுங்கியள்ளது.

இன்று 08.01.2022 அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த இருப்பு பொருள் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர்.

கரை ஒதுங்கியுள்ள இரும்பு பொருள் கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இது இரும்பு பாதை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன ஆற்றினை கடப்பதற்காகவும்,கடல் நீர் ஏரியினை கடப்பதற்காவும் வாகனங்களை ஏற்றிசெல்லும் இரும்பு பாதை என தெரிவித்துள்ளார்கள்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் அடி அதிகமாக காணப்படுவதால் இந்த இரும்பு பொருள் கரை ஒதுங்கியுள்து.