Home jaffna news முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவனைக் காணவில்லை

முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவனைக் காணவில்லை

15
முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாகவும் வீதிரும்பாத நிலையில், முல்-லைத்தீவு காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்-லைத்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் உண்ணாப்புலவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கே.சானுயன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ம்திகதி மாலை நேர கல்விக்காக வீட்டை விட்டுச் சென்ற அவா் இதுவரையும் , வீடு திரும்பாத நிலையில் முல்-லைத்தீவு காவல் நிலையத்தில் பெற்றோர்களால் நேற்று (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்-லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாணவனை அறிந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது 0775690671 கையடக்கத் தொலைபேசி இலகத்துக்கோ அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவில்

முல்-லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் பதிவாகி வருவதாகவும் மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் முல்லைத்தீவு காவல்துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.