Home Tamil News முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் இருவர் பணி நீக்கம்!

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் இருவர் பணி நீக்கம்!

10

முல்லைத்தீவு நகர்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் 24 மணிநேர மக்கள் சேவையினை வழங்கிவருகின்றது ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் டீசல்,மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலங்களில் வரிசையில் நின்று பெற்றுவந்துள்ளார்கள்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி அதிகளவிலான எரிபொருட்களை தெரிந்தவர்களுக்கு வழங்குவதாக பலரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் சங்க நிர்வாகத்தினரின் அதிரடிநடவடிக்கையால் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டு பணியாற்றி இருவர் தற்காலிகமா பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கிவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் இவ்வறான பிரச்சினை நிலவி வருகின்றமை பாவனையாளர்களால் முறையிடப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மின்விளக்குகளை நிறுத்திவிட்டு எரிபொருள் வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

தங்களுக்கு பிடித்தவார்களுக்கு வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

எனவே இவ்வாறான சந்தர்பங்களை ஏற்படுத்தாது கூட்டுறவு சங்க நிர்வாகம் சரியாக மக்களுக்கு எரிபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள