Home jaffna news முயல் மற்றும் மான் இறைச்சியுடன் இருவர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

முயல் மற்றும் மான் இறைச்சியுடன் இருவர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

23

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மான் மற்றும் முயலை வேட்டையாடி இறைச்சிக்காக கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றம் பிணையில் விடுத்துள்ளது.

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தியபோது தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.

ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு சாலைப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மிருகங்கள் வேட்டையாடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மிருகங்களை வேட்டையாடி இறைச்சிக்காகக் கொண்டு சென்ற இருவரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 31 கிலோகிராம் மான் இறைச்சி, ஒரு முயல், மூன்று கத்தி, இரண்டு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஊடையார் கட்டினை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,அவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

முயல் மற்றும் மான் இறைச்சியுடன் இருவர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு முயல் மற்றும் மான் இறைச்சியுடன் இருவர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு