முகநூலில் அப்பாவிப் பெண் பிள்ளைகளை கேவலப்படுத்திய ஆசாமிக்கு பாதிக்கப்பட்ட பெண்களால் செருப்படி வழங்கப்பட்ட தரமான சம்பவம் ஒன்று வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வட்டகச்சியில் வசித்து வந்த ஆசாமி ஒருவர் யேர்மனிய யுவதி ஒருவரைப் பயன்படுத்தி கடந்த 2019ல் யேர்மன் சென்றிருந்தார்.
அங்கு சென்ற வேளையில் வட்டகச்சி மற்றும் யேர்மனிய யுவதிகள் பலரை பற்றி தகாத முறையில் முக நூலில் பதிவுகளை இட்டு வந்தமையால் யேர்மனிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவருட காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த ஆசாமி, 15.03.2022 அன்று வட்டகச்சி பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்கள், பொது மக்கள் மத்தியில் சிக்கிய ஆசாமிக்கு பெண்களால் செருப்படி வழங்கி அபிசேகம் செய்யப்பட்ட சம்பவம் வட்டக்கச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இது போன்ற முகநூலில் கேவலமான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களிற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.