Home Astrology மீனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

மீனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

11
மீனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த சூழ்நிலையும் எளிதாக கையாளும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மீன ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் எந்தவித சந்தேகமும் கிடையாது.

13/4/2022 வரை எதிலும் நிதானம் தேவை. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் விரயங்கள் மற்றும் மருத்துவச் செலவுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

மீனம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எதிலும் பொறுமை, நிதானம், விழிப்புணர்வு தேவை. உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லத அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மாணவர்கள் சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருங்கள். 13/4/2022 க்கு பிறகு எதிலும் பொறுமை, நிதானம், விழிப்புணர்வு தேவை. கடந்த கால எதிர்மறை அனுபவங்களில் உள்ள கோபத்தையும், விரக்தியையும் விட்டு, அதில் உள்ள அனுபவங்களை படிப்பினைகளாக எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் எதிர்கால வெற்றிகரமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

வீண் கோபத்தையும், டென்ஷனையும் தவிருங்கள். . குடும்ப விஷயத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு வர வாய்ப்புள்ளதால் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

மீனம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சிறுசிறு தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுங்கள். திடீர் தனலாபம் உண்டு.

விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தாமதமாகலாம். மாணவர்கள் சிந்தனைகளை சிதறவிடாமல், படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபட கடன் பிரச்னைகள் தீரும்.

மீனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மீனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், மீனம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்,