Home tamil news today மிளகாய் தூள் தாக்குதல்! சிறுவர்கள் ஐவர் வைத்தியசாலையில்

மிளகாய் தூள் தாக்குதல்! சிறுவர்கள் ஐவர் வைத்தியசாலையில்

13

திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கை கலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவனை தாக்கியுள்ளதுடன், மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதனால் 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை மற்றைய குழுவில் உள்ள 2 சிறுவர்களும் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்து நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த 5 சிறுவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சிறுவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.