தானியங்கி ஒளிச் சமிக்கை புகையிரதக் கடவையில் சடுதியாக ஏறிய பட்டா வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
காய்சலால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளை சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கடவையில் இதனுடன் நான்காவது விபத்து, இக் கடவையில் பாதுகாப்பு காவலாளியை நிறுத்துமாறும், மறிப்புக் கதவு போட வேண்டும் என மக்கள் பல தடவை போரிக்கை விடுத்துள்ளனர். இன்று வரை இல்லை.
இதனால் இன்று புகையிரத பாதை தடுத்து முடக்கப்பட்டது, ரயர்கள் போட்டு கொழுத்தி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர், இதனால் புகையிரத சேவை தடைப்பட்டது.
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது குறித்த கடவையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மிருசுவில் பகுதியில் பட்டா வாகனம் மீது ரயில் மோதி விபத்து !! ஒருவர் பலி