இலங்கைக்கு மியான்மரிடமிருந்து சுமார் ஒரு லட்ச மெற்றிக் தொன் அரிசியை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது வர்த்தக அமைச்சுக்கும் மியான்மார் அதிகரிகளுக்குமிடையில் கையெழுத்திட உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு பெறப்படும் அரிசி பாதுகாப்பாக களஞ்சியப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.