மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டாரா நயன்தாரா ? நெற்றியில் பொட்டுடன் இருக்கும் வீடியோ வைரல் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூஜை செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
அதனை தொடர்ந்து அவர்கள் மாலையில் மிக எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்றும் தகவல் வந்தது.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பி இருக்கிறது அவர்களது லேட்டஸ்ட் வீடியோ.
திருமணம் ஆன பெண்கள் போல நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.