Home Local news மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

14

உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் டெக்னிக்கல் சந்தி வழியாக பெட்டாவை நோக்கி பேரணியாகச் சென்றது.

மருத்துவ பீட மாணவர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது உலக வர்த்தக மையம் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.