Home Local news மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பாலர் பாடசாலை சிறுமி பரிதாப மரணம்

மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பாலர் பாடசாலை சிறுமி பரிதாப மரணம்

28

முன்பள்ளியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் மரத்தின் கிளையொன்று தலையில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று (06) தெரிவித்தனர்.

பலாங்கொடை பின்னவல நெல்லிவெல பிரதேசத்தில் வசிக்கும் நாணயக்கார முதியன்சேலாகே நெஸ்மா பிரேமரத்ன என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெல்லிவளையில் உள்ள முன்பள்ளிக்கு சென்றிருந்த அவர், அது முடிந்து தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வீதிக்கு மேலே உள்ள மரத்தின் காய்ந்த கிளை ஒன்று தலையில் முறிந்து விழுந்து காயங்களுக்குள்ளாகி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலாங்கொடை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் ஜயநாத் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.