Home Local news மன்னாரில் தொடரும் பழிக்குப்பழி: வைத்தியசாலையில் பதற்றம் – அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து!

மன்னாரில் தொடரும் பழிக்குப்பழி: வைத்தியசாலையில் பதற்றம் – அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து!

14

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஏற்கனவே நொச்சிக்குளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து, மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இன்று அதிகாலை கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்காகினார்.

வைத்தியசாலை விடுதியில் நோயாளியொருவரை பராமரித்து வந்த ஒருவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டார்.

நொச்சிக்குளம் வாள்வெட்டிற்கு பதிலடியாக அவர் கத்திக்குத்தை நடத்தினாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கத்திக்குத்தை நடத்தியவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில் இன்று அதிகாலையில் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த மற்றும் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.