Home Local news மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிய பேராயர்

மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிய பேராயர்

16

இலங்கை முழுவதும் பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்துள்ள நிலையில், அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையில், நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பல அருட்தந்தைகளும், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் தேசியக் கொடியையும் ஏந்தி ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிய பேராயர் மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிய பேராயர் மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிய பேராயர் மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிய பேராயர்