Home Local news போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 10பேர் படுகாயம்

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 10பேர் படுகாயம்

10

ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது ஒருவர் மரணித்துள்ளதுடன் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்

இந்த சம்பவம், ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ரம்புக்கனை தொடரூந்து கடவையை சுமார் 15 மணித்தியாலங்களாக போக்குவரத்துக்காக தடை செய்தமையை அடுத்தே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 10பேர் படுகாயம் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 10பேர் படுகாயம் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 10பேர் படுகாயம்