Home jaffna news பூதன்வயலில் மற்றும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்திய குடும்பபெண் சடலமாக மீட்பு

பூதன்வயலில் மற்றும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்திய குடும்பபெண் சடலமாக மீட்பு

14

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ்பிரிவிற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 08.01.2022 அன்று பெண்ணொருவர் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த 36 வயதுடைய யோகராசா றாஜினி என தெரியவந்துள்ளது.

கடந்த 04.01.2022 ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திருமணமாகி வயதுவந்த இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்துவந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

22 வயது ஆணும் 16 வயது பெண்பிள்ளைகளும் உள்ள நிலையில் முதற்கணவர் தட்டையர்மலை முத்துஜயன்கட்டில் வசித்துவந்துள்ளார்.

தாயின் பராமரிப்பில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்கு பூதன்வயல் கிராமத்தில் கிராம சேவையாளரின் பதிவுகூட இல்லாதநிலைகாணப்பட்டுள்ளது.

வேலைக்காக வந்து நின்ற ஆணுடன் உயிரிழந்த பெண்ணும் தற்காலிக சிறுகொட்டிலில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

கடந்த 04.01.2022 அன்று தொடக்கம் காணாமல் போன குறித்த பெண் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் தென்னங்காணியில் கிடந்த கைப்பையே இவர் உயிரிழந்தமையினை இனம் காட்டியுள்ளது.

உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று குறித்த தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது பிரதேச மக்களால் இனம்காணப்பட்டு கிராம சேவகருக்கு தகவல் தெரிவிக்கபபட்டுள்ள நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசாரிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க விரைந்த பொலீசார் மாற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்தியர் பி.நிலுசன்,தடையவியல் பொலீசார் ஆகியோர் முன்னிலையில் சடம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 33 வயதுடை கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவரை முள்ளியவளை பொலீசார் விசாரணைக்காக அழைத்துசென்றுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.