KGF அத்தியாயம் 2 இன் வெற்றியின் காரணமாக புஷ்பா 2 ஸ்கிரிப்ட் மேம்படுத்தலைப் பெறுகிறது. KGF 2 படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தை காட்சிப்படுத்துவதற்காக புஷ்பா 2
இதில் சமந்தா ஒரு பாட்டுக்கு மாத்திரம் ஆடிய நிலையில் அது மிகபெரிய ஹிட் ஆனது.முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் அதிக பட்ஜெட் ஒதுக்கி மிக பிரமாண்டமாக எடுக்க தொடங்கினார்கள்.
ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் கசிந்துள்ளது.
புஷ்பா படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை விட தற்போது கேஜிஎப் 2 பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்று வருகின்றது. அதனால் புஷ்பா 2 இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாராம் இயக்குநர் சுகுமார்.
அதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படத்தின் ஸ்கிரிப்டில் சில மாறுதல்கள் செய்யும் பணியில் இறங்கி இருக்கிறாராம். அதனால் புஷ்பா 2 விரைவில் இன்னும் அதிகம் பிரம்மாண்டத்தோடு தொடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.