Home Cinema பீஸ்ட் பட விவகாரத்தால் பேசவே பயமா இருக்கு.. மேடையில் இருந்து தெறித்து ஓடிய தளபதி...

பீஸ்ட் பட விவகாரத்தால் பேசவே பயமா இருக்கு.. மேடையில் இருந்து தெறித்து ஓடிய தளபதி 66 பட இயக்குனர்..

11

இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் அடுத்ததாக விஜய் அறிவித்துள்ளார், சில வாரங்களுக்கு முன்பு முஹூர்த்த பூஜையுடன் படம் தொடங்கப்பட்டது. படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன, மேலும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் முக்கிய ஷெட்யூல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் FEFSI உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் படத்தின் படப்பிடிப்பு இடத்தை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு மாற்றுமாறு தயாரிப்பாளர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் தோல்வியை பீஸ்ட் படம் தழுவியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தனது தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் தளபதி 66 படத்தின் இயக்குனர் வம்சி பிரபல நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தளபதி 66 படத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு இப்போ படத்தை பற்றி பேச பயமா இருக்கு என்று சொல்லவிட்டு உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கி விட்டார் வம்சி. பீஸ்ட் படத்தை பார்த்ததனால், இந்த பயம் அவருக்கு ஏற்பட்டதா என்று ரசிகர்கள் பலரும், கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒரு பேட்டியில், சூழ்நிலையும் வாய்ப்பும் அமைந்தால் ‘மிருகம்’ இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஒரு பிராந்திய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் வீரராகவன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் படத்தின் 2-ம் பாகம் இருக்கும் என்று கூறினார்.