தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் உதயநிதி ஸ்டாலின். இதனைத் தொடர்ந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
அந்த வகையில் தற்பொழுது அருண் காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே மாதம் 20ம் திகதி வெளியாகவுள்ளது.
இது தவிர சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றும் இவர் ரெட் ஜெயண்ட் சார்பில் தற்போது பல படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தினையும் இவர் தான் வாங்கியிருந்தார்.
தமிழ் மக்கள் தமிழ் படங்கள ஓட வைக்கறாங்களோ இல்லையோ நல்ல படங்கள் எந்த language’ah இருந்தாலும் ஓட வச்சிடுறாங்க – Udhay
சொல்லாம சொல்றான்யா 😂#BeastDisaster #IndustryDisasterBeast pic.twitter.com/qIXb7f0rD9
— Dinu (@Dinu_Akshiii) April 22, 2022
இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளதோடு KGF திரைப்படம் தான் வசூலில் அள்ளிக் குவித்துள்ளது. இதனால் பீஸ்ட் படம் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான தி வாரியர் படகின் பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய உதயநிதி, தெலுங்கு படங்கள் தற்போது பான் இந்திய படமாக மாறிவருகின்றது. எனவே தமிழ் படங்களை ரசிகர்கள் ஓடவைக்கின்றார்களோ இல்லையோ நல்ல படங்கள் எந்த மொழியாக இருந்தாலும் ஓடவைக்கின்றார்கள்.
இருப்பினும் நான் தமிழ் படங்களை குறைகூறவில்லை. நல்ல படங்களை ரசிகர்கள் ஓடவைப்பார்கள் என பேசியுள்ளார் இதன் மூலம் பீஸ்ட் படத்தை விட KGF நல்ல படம் என உதயநிதி மறைமுகமாக கூறியதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.