Home Cinema பீஸ்ட் படத்தை அதள பாதாளத்திற்கு தள்ளிய KGF 2 !! இதுவரை வந்துள்ள வசூல் தொகை...

பீஸ்ட் படத்தை அதள பாதாளத்திற்கு தள்ளிய KGF 2 !! இதுவரை வந்துள்ள வசூல் தொகை எவ்வளவு தெரியுமா ?

49

யாஷ் நடித்த அத்தியாயம் 2 கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகளை உருவாக்கி இப்போது சரித்திரம் படைத்து வருகிறார் யாஷ் . தமிழக பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் படைத்த சாதனைகளை இப்படம் வெறும் ஒரே நாளில் முறியடித்தது..

விஜய்யின் பீஸ்ட் வசூல் சாதனை செய்யும் என மக்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் படத்தின் கதை கொஞ்சம் சொதப்ப படமும் மோசமான விமர்சனங்களால் அடிவாங்கியது.

முதல் ஷோ முடிந்ததில் இருந்தே படத்திற்கான வசூல் அப்படியே குறைய ஆரம்பித்துவிட்டது. இப்படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆன KGF 2 நல்ல சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு தயாராக இருந்தது.

எனவே இப்படம் வசூல் வேட்டை நடத்தி வந்தது.விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தான் வெளியானது, ஹிட் படமாக இருந்தால் இந்நேரம் படத்தின் வசூல் எங்கேயோ சென்றிருக்கும்.

இப்போது சுத்தமாக பீஸ்ட் பட வசூல் குறைய பிப்ரவரி மாதம் வெளியான RRR படம் கூட விஜய் படத்தை விட அதிகம் வசூல் செய்து வருகிறது. தற்போது வெளிநாட்டில் நேற்றைய தினம் நன்கு வசூலித்த படங்களின் விவரம் வந்துள்ளது. அதில் விஜய்யின் பீஸ்ட் அடி பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றே கூறலாம். காரணம் RRR படத்தை விட குறைந்த வசூலை செய்துள்ளது.

இதோ அந்த வசூல் விவரம்,

Kgf 2- $132,568
Jersey-$40,885
RRR-$10,513
பீஸ்ட்- $5,059

இதற்கிடையில், ராக்கிங் ஸ்டார் யாஷின் ஆக்‌ஷன் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பாக்ஸ் ஆபிஸில் கர்ஜிக்கிறது. படத்தின் வசூல் இதுவரை 268.63 கோடிகள். வியாழன் அன்று இப்படம் ரூ 13.58 கோடியும், புதன் அன்று ரூ 16.35 கோடியும் வசூலித்துள்ளது. வார இறுதி என்பதால் படம் அதன் இரட்டை இலக்க வசூலை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.