Home Cinema பீஸ்ட் படத்தால் அதள பாதளத்திற்கு சென்ற விஜய் !! ஒரே படத்தால் சரிந்த விஜயின் மார்க்கெட்...

பீஸ்ட் படத்தால் அதள பாதளத்திற்கு சென்ற விஜய் !! ஒரே படத்தால் சரிந்த விஜயின் மார்க்கெட் !!TRP-யிலும் தோல்வி!!

18

விஜய் நடித்த ‘பீஸ்ட் ‘ கடந்த வாரம் பல மொழிகளில் வெளியானது, மேலும் நடிகரின் பரந்த வெளியீடு பாக்ஸ் ஆபிஸில் ஒரு சில சாதனைகளை முறியடித்தது. ஆனால் இப்படம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது, துரதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, படம் வெளியான அடுத்த நாளே படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் காற்று வாங்கியது. பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாள் கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான KGF படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் KGF படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில், மறுபக்கம் பீஸ்ட் படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு KGF திரையிடப்பட்டது. இது இனி வரும் காலங்களில் படைப்புகள் நன்றாக இருந்தால் யார் நடித்திருந்தாலும் தமிழக மக்கள் அங்கிகரிப்பார்கள், குப்பை படத்தில் நட்சத்திர நடிகர் நடித்திருந்தால் கூட இனி மக்கள் ஏமாறுவதர்க்கு தயாரக இல்லை என்பதை இது உணர்த்தியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனை தொடர்ந்து நஷ்ட தொகை கேட்டு அந்த படத்தின் நடிகர் விஜய்யிடம் முறையிடுவதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் விஜய் வீட்டை முற்றுகையிடலாம் என கூறப்படுகிறது, அப்படி நஷ்ட தொகை கொடுக்கவில்லை என்றால் விஜய் புதிய படத்தை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற படலாம் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் பீஸ்ட் படம் பாக்ஸ் ஆபிஸில் படு மோசமான நிலைமையில் உள்ளது.அதுவும் தமிழகத்திலே ரூ 100 கோடி வசூலை தொட பீஸ்ட் போராடி வருகின்றதாம்.நேற்றெல்லாம் ரூ 1 கோடி தான் தமிழகத்திலேயே பீஸ்ட் வசூல் வந்துள்ளதாம்.

இதனால் விஜய் மார்க்கெட் ஒரே படத்தில் மிக குறைந்தது எல்லோருக்கும் ஷாக் தான்.இப்படி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் பீஸ்ட் படம், நேரலையிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஆம், படத்தின் ரிலீசுக்கு முன் விஜய் கொடுத்த பேட்டி TRPல் 10 வரை செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், 5.68 TRP மட்டுமே ரீச் செய்துள்ளது விஜய்யின் நேருக்கு நேர் பேட்டி.

இப்போது, ​​’பீஸ்ட் ‘ கிளைமாக்ஸ் முதலில் எப்படி திட்டமிடப்பட்டது என்பது இங்கே. மாலில் கடத்தப்பட்டவர்களைக் காப்பாற்றிய பிறகு, விஜய் காணாமல் போகிறார், பின்னர் தப்பியோடிய பயங்கரவாதத் தலைவரை மீட்டெடுக்க பயங்கரவாத மண்டலத்திற்குள் நுழைகிறார். தீவிரவாத மண்டலத்துக்குள் விஜய் நுழைந்தது தெரியாமல், தீவிரவாதிகளுக்கு பதில் தாக்குதல் நடத்த திடீர் என்ட்ரி கொடுத்தார்.